×

பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது: செல்போன் பறிமுதல்

சென்னை: பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில், யாரோ தன்னுடைய வாட்ஸ் ஆப், Instagram, E.mail முதலியனவற்றை hack செய்து, தனது ஆபாச புகைபடங்களை Instagram சமூக வலைளத்தில் தனது நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து அவமானப்படுத்தியதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களிலிருந்து அழிக்குமாறும் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில், இ.த.ச., பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் தகவல் தொழிலுநுட்ப பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகார்தாரரின் Instagram குறித்து தகவல்கள் சேகரித்து, IPDR மற்றும் IP log முதலியன பெற்று எதிரியின் தகவல்கள் செல்போன் எண்ணை கண்டுபிடித்து மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட தமீம் அன்சாரி, ஆ/வ.22, த/பெ.சாஹூல் ஹமீது, சாதிக் பாஷா, 1வது ஆழ்வார் திருநகர், சென்னை என்பவரை நேற்று (23.01.2024) கைது செய்தனர்.

அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி தமீம் அன்சாரி புகார்தாரருக்கு தெரிந்த நபர் என என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி தமீம் அன்சாரி விசாரணைக்குப் பின்னர் நேற்று (23.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் பெண்கள் தங்களது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் கையாளுமாறும், யாரையும் நம்பி கடவுச்சொற்களை கூற வேண்டாம் என சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும்,பெண்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பெண்கள் குறித்து ஆபாச செய்திகள், ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

The post பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது: செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,Southern Zone Cyber Crime Police Station ,Instagram ,
× RELATED சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022...